×

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி முதல் ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் 7ம் தேதி சேலத்தில் நடைபெறுகிறது: தயாநிதி மாறன் எம்.பி. அறிவிப்பு

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் ஆலோசனை கூட்டம் கட்சியின் முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் வருகிற 7ம் தேதி சேலத்தில் நடைபெறும் என்று தயாநிதி மாறன் எம்.பி. அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் ஆலோசனை கூட்டம் வருகிற 7ம் தேதி (ஞாயிறு) மாலை 3 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கலைஞர் மாளிகையில் கட்சியின் முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற இருக்கிறது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் இரா.ராஜேந்திரன் எம்எல்ஏ, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், அணியின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தை நடத்துவது குறித்தும், ஒன்றிய நகர மற்றும் பேரூர் கழக அமைப்பாளர்கள் நியமிப்பது குறித்தும் விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* பெண்களுக்கான மின்னொளி கூடைப்பந்து போட்டி இன்று தொடக்கம்
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன் எம்பி விடுத்துள்ள அறிவிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, அணியின் துணை செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி ஏற்பாட்டில், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தின் உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று முதல் 7ம் தேதி வரை 4 நாள் அகில இந்திய அளவில் பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கூடைப்பந்து போட்டி எனது தலைமையில் நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முன்னணி அணிகள் பங்கேற்கின்றனர். இன்று மாலை வீராங்கனைகளின் அணிவகுப்புடன் போட்டி துவங்கும். வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு 7ம் தேதி பரிசளிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி முதல் ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் 7ம் தேதி சேலத்தில் நடைபெறுகிறது: தயாநிதி மாறன் எம்.பி. அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sangagam Sports Development Team ,Consulting Meeting ,K.K. N.N. Nehru ,Salem ,Dayanidhi Varan M. ,Chennai ,Dizhagam Sports Development Team ,minister ,Kazhagam Sports Development Team ,K. N.N. Nehru ,Dayanidhi Varan ,M. ,GP ,Dinakaran ,
× RELATED திமுக இளைஞரணி சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கல்